Thursday 7 November 2013

வைடுரியம் கோமேதகம் மனிதர்கள் அணியலாம



வைடுரியம் கோமேதகம் மனிதர்கள் அணியலாம

ஜாதக ஆலோசனை பெற வந்தவர் ஒருவர் கேட்ட கேள்வி இது !
நிச்சயம் அணிய கூடாது, ஏனெனில் இவைகள் மற்றவர்களுக்கு அல்லது நவகிரகத்துக்கு தானம் கொடுக்கவே சாஸ்திரம் கட்டளை இடுகிறது.

இதை மீறி பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் ,அதிக கோபம் போர்குணம் , திருமணவாழ்வில் போராட்டம், எதிர்பாரத இழப்புகள் ஆகிய கெடுபலன் மட்டுமே அனுபவிக்கின்றனர் இதுவே உண்மையாகும் . 

வெளி நாடுகளில் ஒருவர் கெட்டு தீமையான பலன்கள் அனுபவிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு   வைடுரியம் கோமேதகம், இதில் ஏதாவது ஒன்றை தருவார்கள்.
இது நடைமுறை உண்மை.

இதை அணிந்த பிறகு அவர் அனைத்தையும் இழந்த மனிதர் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக கண்ட உண்மை, எனவே உங்கள் சுய  ஜாதகத்துக்கு மேன்மையை தரும் அதிர்ஷ்ட கற்களை அணிந்து நன்மை பெறுங்கள்

ஜாதகத்தில் இலக்கணத்திற்கு



 ஜாதகத்தில் இலக்கணத்திற்கு  2 , 4  , 7  , 8  , 12  

 ஆகிய வீடுகளில் செவ்வாய்  இருந்தால், செவ்வாய் தோஷம் என்றும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்துகொண்டால் மணவாழ்க்கை சிறப்பதில்லை என்றும் மக்களிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது.

சில ஜோதிடர்களிடம் கருத்து கேட்கும் பொழுது மக்களுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை, மேலும் பல விதிவிலக்கு உண்டு என்று மழுப்பலான பதில் மட்டுமே  வருகின்றது.

எங்களது பத்து வருட ஜோதிட ஆராய்ச்சியில் கிடைத்த பதில் என்னவென்று பார்ப்போம் :
1 , ஜாதகத்தில் இலக்கணத்திற்கு  2 , 4  , 7  , 8  , 12  ஆகிய வீடுகளில் செவ்வாய்  இருந்தால் அவர்கள் நிர்வாக திறமை மிக அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்,
2, பத்தாயிரம் செவ்வாய் தோஷ ( மற்ற ஜோதிடர்கள் செவ்வாய் தோஷ ஜாதகம் என்று கணித்தஜாதகங்களை ஆராய்ச்சி செய்ததில் 88 சதவிகித ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் ( இலக்கணம் ஆரம்பிக்கும் பாகை வைத்து கணிதம் செய்த முறையில் ) அற்ற ஜாதகங்கள் ஆகும் .
3, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்ததால், அவர்கள் வாழ்வில் ஒன்றும் தீமையான பலன்களை அனுபவிக்கவில்லை, மேலும் ஒருவருடைய ஜாதகம் ஒருவரை எவ்விதத்திலும் பதிக்கவில்லை, நல்வாழ்வினையே வழங்கியுள்ளது இதற்கு காரணமானவர் செவ்வாய் பகவனே என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 
4,   செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்ததால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறை உள்ள குழந்தைகளாக இருப்பார்கள் என்பதும் சுத்தமான மூடநம்பிக்கை, ஏனெனில் இப்படி பிறந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்லறிவுடன் திகழ்கின்றனர்.

5 , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து, வாழ்வில் பெரிய வெற்றிகளை பெற்ற மனிதர்களாக காணப்படவில்லை, சுய ஜாதக அமைப்புக்கு என்ன உண்டோ அதை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் . மேலும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பெரிய சிறப்பான தகுதியுடன் இருப்பதாக தெரியவில்லை.
6 , எங்களது கணிப்பில் தெரிந்தவை முக்கியமானது என்னவென்றால், செவ்வாய் தோஷம் மனிதர்கள் வாழ்வில் எவ்வித பதிப்பான பலன்களையும் தருவதில்லை என்பதே உண்மை .
7 , மூட நம்பிக்கைகளை தவிர்த்து உண்மையான ஜோதிட அறிவை ஏற்று வாழ்க்கையை தன் நம்பிக்கையுடன் வாழுங்கள் .


8 , தமது மகன் மகள் வாழ்வில் செவ்வாய் தோஷம் எவ்வித பதிப்பையும் தருவதில்லை, என்ற உண்மையை உணர்ந்து ,அவர்களுக்கு சரியான வயதில், திருமண வாழ்க்கையை ,அமைத்து தாருங்கள். அவர்கள் வாழையடி வாழையாக வளமுடன் வாழட்டும் . 

ராகு கேதுவுடன் சூரியன், சந்திரன் சேர்க்கை என்ன செய்யும்



ராகு கேதுவுடன் சூரியன், சந்திரன் சேர்க்கை என்ன செய்யும்
சூரியனுடன், ராகு கேது எந்த ஒரு வீட்டிலும் சேர்ந்து இருந்தாலும் அந்தவீடு எந்த அமைப்பை பெறுகிறதோ, அதன் பலன் விருத்தி அடைவதில்லை , குறிப்பாக லக்கினமாக இருந்தால், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள், தாமதம் தோல்வி நிலை ஏற்ப்படுகிறது. 

மேலும் தமது கடின உழைப்பு வெற்றி பெறுவதில்லை,  அதிர்ஷ்டமில்ல நிலை ஏற்படுகிறது. பெரிய மனிதர்கள் உதவி கிடைப்பதில்லை, அரசு ஆதரவு  இல்ல நிலை, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவற்ற நிலை, அரசியலில் பொதுமக்களிடம் வரவேற்ப்பு அற்ற நிலை போன்ற தீமையான பலன்களை மட்டுமே அனுபவிக்கின்றனர்.

இந்நிலை மாற சூரியகிரகண தோஷ நிவர்த்தி செய்வதினால் அணைத்து நன்மையான பலன்களையும் ஜாதகர் அனுபவிக்கலாம் என சாஸ்திரம்  வழி காட்டுகிறது .

இதே அமைப்பில் சந்திரனுடன் ராகு கேது சேர்க்கை ஜாதகருக்கு பொருள் ஆதார அமைப்பில் தடைகளை ஏற்ப்படுத்துகிறது, தொழில் தடை வண்டி வாகனம் சரியாக அமையாதது.

அனைத்தும் இருந்தும் சொகுசான வாழ்வினை அனுபவிக்க முடியாத நிலை , மனப்போராட்டம் மனோவியாதி, டென்சனான வாழ்க்கைமுறை, மனதினை ஒரு நிலை படுத்த முடியாத அமைப்பு போன்று தீமையான பலன்களே ஜாதகருக்கு நடக்கின்றது.

இந்நிலை மாற பௌர்ணமி வழிபாடு, சந்திர கிரகண தோஷ நிவர்த்தி செய்து நலம் பெறலாம்.  

ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா




ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா


ஜாதக ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணின் கேள்வி இது,  ஏனெனில் தாம் இதற்குமுன் பல ஜோதிடர்களிடம் தமது ஜாதகத்தை கொடுத்து ஆலோசனை கேட்ட பொழுது, ஜோதிடர்கள் அனைவரும் உங்களது ஜாதகத்தில், ஐந்தில் ராகு பகவன் இருப்பதால், ஐந்தாம் வீடு கெட்டுவிட்டதாகவும், குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும்  தெரிவித்ததாகவும் அப் பெண்மணி கூறினார்.

இதை கேட்டவுடன் தம்மை பெண்பார்க்க வந்த அனைவரும், தம்மை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை எனவும், தமக்கு இந்நிலை மாற, தாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்,

அவரது ஜாதகத்தை ஆராய்ந்த பொழுது உண்மையில் ராகு ஐந்தில் இல்லை,( லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணித்த அமைப்பில்) நான்காம் வீட்டில் இருந்தார், மிகவும் நல்லநிலையில் ராகு அமர்ந்திருந்தார், பிறகு அந்த பெண்மணிக்கு ராகுவின் நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கம் தந்தோம்.

ராகுவினால் எவ்வித பாதிப்பும் உங்களுக்கு இல்லை எனவும், அவர் ஜாதக கட்டத்தில் தான் ஐந்தில் இருக்கிறார், ஆனால் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை கொண்டு பார்க்கும் பொழுது நான்காம் வீட்டில் உள்ளார், என்றும் அவர் நன்மையான பலன் மட்டுமே தந்து வருகிறர் என்றும், இதனால் ஐந்தாம் வீடு எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் தந்த பிறகே அவருக்கு நம்பிக்கை வந்தது.

மேலும் உங்களது திருமண தாமதத்திற்கு காரணம் களத்திர பாவம் பதிக்கப்பட்டது மட்டுமே என்று கூறி அதற்க்கு என்ன செய்தால் திருமணம் விரைவாகவும் சிறப்பாகவும் நடை பெரும் என்பதையும் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தோம்.


ராகு கேது பகவான் ரிஷபம், மிதுனம், கடகம்,கன்னி, துலாம்,தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் அமர்ந்து அது ஐந்தாம் வீடாக வந்தால், ஜாதகருக்கு ஐந்தாம் பாவத்திற்கு 100 சதவிகித சுப பலன்களையே, பாகு பாடு இல்லாமல் தருகிறார் என்பதே உண்மை .

கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம்



கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம்
ஒரு சின்ன  வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது, ஏன் என்றால் ஒருவர் ஜாதகத்தில் சில  ஜோதிடர்கள், சுபர் அசுபர் என கணக்கில் எடுத்து கொள்வது எப்படி என்றால், சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோர் அசுபர் என்றும், வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோர் சுபர் என்றும். அசுபர்கள் ஒருவரது ஜாதகத்தில் கெட்டால் அவர்கள் நன்மை செய்வார்கள் என்ற கருத்தினை பல ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான கருத்தாகும், எந்த ஒரு கிரகமும் தமது வீடுகளுக்கு நன்மைதரும் அமைப்பில் அமரவேண்டும், அப்பொழுதுதான் அந்த பாவம் நன்மையான பலன்களை வழங்கும், இல்லையென்றால் ஜாதகர் பாடு திண்டாடம்தான். 

சில ஜோதிடர்கள் அசுபர் என சொல்லும் சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் சகல முன்னேற்றங்களை  அடைந்த ஜாதகங்கள் நிறைய உண்டு,
சுபர் என சொல்லும் வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் அனைத்து தீமையான பலன்களை அனுபவித்தவரும் உண்டு, எனவே இது போன்ற வாயில் வந்ததை எல்லாம் வாக்கு என சொல்லி ஜாதகம் பார்க்கவந்தவரை, மண்டை காய வைக்கவேண்டாம் என சில ஜோதிடர்களை வேண்டுகிறேன்.

ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு நபருடன் மேற்கண்ட விவாதம் சென்ற வாரத்தில் நடந்ததை பதிவு செய்துள்ளேன்.