ராகு கேதுவுடன் சூரியன், சந்திரன் சேர்க்கை
என்ன செய்யும்
சூரியனுடன், ராகு கேது எந்த ஒரு வீட்டிலும் சேர்ந்து இருந்தாலும் அந்தவீடு
எந்த அமைப்பை பெறுகிறதோ, அதன் பலன் விருத்தி அடைவதில்லை , குறிப்பாக லக்கினமாக இருந்தால்,
ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள், தாமதம் தோல்வி நிலை ஏற்ப்படுகிறது.
மேலும் தமது கடின உழைப்பு வெற்றி பெறுவதில்லை, அதிர்ஷ்டமில்ல நிலை
ஏற்படுகிறது. பெரிய மனிதர்கள் உதவி கிடைப்பதில்லை, அரசு ஆதரவு இல்ல நிலை, குடும்ப
உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவற்ற நிலை, அரசியலில் பொதுமக்களிடம் வரவேற்ப்பு அற்ற நிலை
போன்ற தீமையான பலன்களை மட்டுமே அனுபவிக்கின்றனர்.
இந்நிலை மாற சூரியகிரகண தோஷ நிவர்த்தி செய்வதினால் அணைத்து நன்மையான பலன்களையும்
ஜாதகர் அனுபவிக்கலாம் என சாஸ்திரம் வழி காட்டுகிறது .
இதே அமைப்பில் சந்திரனுடன் ராகு கேது சேர்க்கை ஜாதகருக்கு பொருள் ஆதார
அமைப்பில் தடைகளை ஏற்ப்படுத்துகிறது, தொழில் தடை வண்டி வாகனம் சரியாக அமையாதது.
அனைத்தும் இருந்தும் சொகுசான வாழ்வினை அனுபவிக்க முடியாத நிலை , மனப்போராட்டம்
மனோவியாதி, டென்சனான வாழ்க்கைமுறை, மனதினை ஒரு நிலை படுத்த முடியாத அமைப்பு போன்று
தீமையான பலன்களே ஜாதகருக்கு நடக்கின்றது.
இந்நிலை மாற பௌர்ணமி வழிபாடு, சந்திர கிரகண தோஷ நிவர்த்தி செய்து நலம்
பெறலாம்.
No comments:
Post a Comment