கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம்
ஒரு சின்ன வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது, ஏன் என்றால் ஒருவர் ஜாதகத்தில்
சில ஜோதிடர்கள், சுபர் அசுபர் என கணக்கில் எடுத்து கொள்வது எப்படி என்றால், சூரியன்,
செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோர் அசுபர் என்றும்,
வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோர் சுபர் என்றும். அசுபர்கள்
ஒருவரது ஜாதகத்தில் கெட்டால் அவர்கள் நன்மை செய்வார்கள் என்ற கருத்தினை பல ஜோதிடர்கள்
தெரிவிக்கின்றனர்.
இது முற்றிலும் தவறான கருத்தாகும், எந்த ஒரு கிரகமும் தமது வீடுகளுக்கு
நன்மைதரும் அமைப்பில் அமரவேண்டும், அப்பொழுதுதான் அந்த பாவம் நன்மையான பலன்களை வழங்கும்,
இல்லையென்றால் ஜாதகர் பாடு திண்டாடம்தான்.
சில ஜோதிடர்கள் அசுபர் என சொல்லும் சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன்,
சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் சகல முன்னேற்றங்களை
அடைந்த ஜாதகங்கள் நிறைய உண்டு,
சுபர் என சொல்லும் வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோரது
திசை புத்தி நடக்கும் காலங்களில் அனைத்து தீமையான பலன்களை அனுபவித்தவரும் உண்டு, எனவே
இது போன்ற வாயில் வந்ததை எல்லாம் வாக்கு என சொல்லி ஜாதகம் பார்க்கவந்தவரை, மண்டை காய
வைக்கவேண்டாம் என சில ஜோதிடர்களை வேண்டுகிறேன்.
ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு நபருடன் மேற்கண்ட விவாதம் சென்ற வாரத்தில் நடந்ததை
பதிவு செய்துள்ளேன்.
No comments:
Post a Comment